பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்: பென்னி மோர்டான்ட் விலகல்


பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் அடைய தவறினார்.

200 டோரி எம்.பிக்களின் ஆதரவுடன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெறத் தவறியதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக்( Rishi sunak) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்தார். 

இதையடுத்து அறிவிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமருக்கான தேர்தலில் போட்டியாளர்கள் குறைந்தது 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும் என்றும், போட்டிக்கான வேட்புமனு திங்கட்கிழமை மதியம் 2 மணியுடன் முடிவடையும் என்றும் கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்து இருந்தது.

இன்று மதியம் 12 மணி நிலவரப்படி ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிக்களின் ஆதரவும் கிடைக்க பெற்று இருந்தது.

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவை ரிஷி சுனக் அடைந்தார், ஆனால் எதிர் போட்டியாளராக கருதப்பட்ட பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் அடைய தவறினார்.

இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பான்மை டோரிகளின் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.
 

100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற தவறியதை அடுத்து பென்னி மோர்டான்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் சக ஊழியர்களின் உறுதியான தேவை என்ன என்பது தெளிவாக உள்ளது, நாட்டின் நலனுக்காக அவர்கள் இந்த முடிவை நல்லெண்ணத்தில் எடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்: பென்னி மோர்டான்ட் விலகல் | Rishi Sunak To Be Prime Minister Of UkPA

இதன் விளைவாக, நாங்கள் இப்போது எங்கள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளோம். இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது மற்றும் எங்கள் கட்சியின் பன்முகத்தன்மை மற்றும் திறமையை மீண்டும் ஒருமுறை காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


கூடுதல் செய்திகளுக்கு; வட கொரியா தனிமைப்படுத்திக் கொள்கிறது: தீபகற்பத்தில் அமைதி சீர்குலைப்பதாக தென் கொரியா குற்றச்சாட்டு

மேலும் கன்சர்வேட்டிவ் தலைவர் ரிஷி சுனக்கிற்கு இப்போது அவரது முழு ஆதரவு இருப்பதாகவும், தேசத்தின் நலனுக்காக ஒன்றுபட்டு செயல்படுவதற்கான நேரம் இது என்றும் பென்னி மோர்டான்ட் தெரிவித்துள்ளார்.

 
நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு உலக தலைவர்கள் மற்றும் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராகிறார் ரிஷி சுனக்: பென்னி மோர்டான்ட் விலகல் | Rishi Sunak To Be Prime Minister Of UkREUTERS



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.