மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியில் கேரேஜில் இருந்து மதில் சுவற் மொத்தமாக சரிந்து சிறுவன் மீதும் அவரது தந்தை மீதும் விழுந்ததில் பரிதாமாக கொல்லப்பட்டுள்ளார்.
கிளாக்டன் பகுதியிலேயே வெள்ளிக்கிழமை இரவு குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் 12 வயதேயான Scott-Swaley Daniel Stevens என்ற சிறுவன் உடல் நசுங்கி பலியாகியுள்ளார்.
Image: Adam Gerrard
இந்த விபத்தில் சிறுவனின் தந்தையும் படுகாயமடைந்திருந்தும், மகனை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முயற்சிகள் வீணானதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறிது நேரத்திலேயே சிறுவன் மரணமடைந்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களும், புறநகர் மீட்புக்குழுவும் உதவிக்கு முன்வந்துள்ளனர்.
தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
@PA
இந்த நிலையில், சிறுவனின் புகைப்படத்தை வெளியிட்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தியுள்ள குடும்பம், தாங்கள் அனுபவிக்கும் வலியின் ஆழத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை எனவும், மொத்த குடும்பமும் நொறுங்கிப் போயுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சுவர் இடிந்து விழுந்ததன் காரணம் தொடர்பில் விசாரிக்கப்படும் எனவும், பாதுகாப்பு தொடர்பிலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.