பிரித்தானியா திரும்பும் மன்னர் மூன்றாம் சார்லஸ்: ரிஷி சுனக் உடன் எப்போது சந்திப்பு?


சாண்ட்ரிங்ஹாம் தனியார் அரச தோட்டத்தில் இருந்து மன்னர் இன்று லண்டன் பயணம்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கை சந்திப்பதற்கு சாத்தியமில்லை.

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மன்னர் மூன்றாம் சார்லஸ் லண்டன் திரும்புகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடத்தப்பட்ட தேர்தலில் ரிஷி சுனக் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 

பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் பென்னி மோர்டான்ட் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெறத் தவறியதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக்( Rishi sunak) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியா திரும்பும் மன்னர் மூன்றாம் சார்லஸ்: ரிஷி சுனக் உடன் எப்போது சந்திப்பு? | King To Return To London After Rishi Wins ElectionSKY NEWS

வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2 மணிக்கு நிறைவடைந்த நிலையில் ரிஷி சுனக் 200 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில் முன்னதாக திட்டமிட்டபடி, சாண்ட்ரிங்ஹாம் என்ற தனியார் அரச தோட்டத்தில் இருந்து மன்னர் இன்று மதியம் லண்டனுக்குப் பயணம் செய்வார் எனத் தெரியவந்துள்ளது.


கூடுதல் செய்திகளுக்கு; பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் முதல் புகைப்படம்: 200 டோரி எம்.பிக்கள் ஆதரவில் அபார வெற்றி 

பிரித்தானியா திரும்பும் மன்னர் மூன்றாம் சார்லஸ்: ரிஷி சுனக் உடன் எப்போது சந்திப்பு? | King To Return To London After Rishi Wins Election

ஆனால் லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வருகை தரும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ், இன்று  லிஸ் ட்ரஸின் ராஜினாமாவை ஏற்று அவருக்கு பதிலாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக்கை சந்திப்பதற்கு சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.