பொங்கிய எடப்பாடி… முதல்வரின் பதில் என்ன? கோவை கார் குண்டுவெடிப்பு சதி வேலையா?

கோவை மாநகரின் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நேற்று அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் கார் ஓட்டுநர் ஒருவர் பலியாக விஷயம் பரபரப்பை கூட்டியது. இதன் பின்னணி என்ன? பயங்கரவாதிகள் சதித்திட்டமா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். ஏடிஜிபி முதல் டிஜிபி வரை பலரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பின்னணி குறித்த உண்மையை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையில் பலியான நபர் குறித்தும், சிசிடிவி காட்சிகளும், மர்ம மூட்டைகள் பற்றிய தகவல்கள் சிக்கின. உயிரிழந்த ஓட்டுநர் ஜமேஷா முபின் எனத் தெரியவந்தது. இவருடைய பின்னணி குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தது பெரும் அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் கோவை சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும்,

காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்க வைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும்

நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூறப் போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா?

அல்லது ஏதேனும் சதி வேலையா? அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா? என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தமுமின்றி, சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளையும், இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.