மத்திய அரசு தலையிடும்… திமுக அரசுக்கு அப்புறம் சிக்கல் தான்- பாஜக தடாலடி!

திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், கோட்டையில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் செயல்களை கண்காணிக்க தவறிய நேரத்தில் கோட்டை ஈஸ்வரன் தான் தீபாவளி சமயத்தில் மக்களை காப்பாற்றியுள்ளார்.

உடனே டிஜிபி வருகிறார். அது பாராட்டுக்குரியது. மிகச்சிறந்த அதிகாரிகளை திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நியமித்தார்கள். தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இங்கு வந்தாலும் இவர்களுக்கு அடிபணிந்து தான் இருக்கும் நிலையுள்ளது. தமிழக அரசு தீவிரவாத செயல்களை மூடி மறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் வித்திடுகிறது. இந்த போக்கால் திமுக முற்றிலும் அழிந்துவிடும் என்பதை முதல்வர்

உணர வேண்டும். மத்திய அரசின்‌ நடவடிக்கையால் காஷ்மீரில் பெரும்பகுதி அமைதி பூங்காவாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மிகவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் தான் தீவிரவாதத்தை தடுக்க முடியும் என்றார்.

எடுப்பார் கைப்பிள்ளையாக காவல்துறை இருக்கக்கூடாது. ஒளிவு மறைவு இல்லாமல் கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்து தீவிரவாதத்தை அடக்கி ஒடுக்குவது தான் தமிழகம் அமைதி பூங்காவாக விளங்குவதற்கு ஒரே வழி. அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விசாரணை நடைபெற வேண்டும்.

கோவையை குறிவைத்து நடக்கும் தாக்குதல்கள் அனைத்தும் இரண்டாவது பெரிய தொழில் நகரத்தை சீர்குலைக்கவும், தமிழகத்தின் பொருளாதாரத்தை நிலைகுலையவும் வைக்கும். எனவே தமிழக அரசு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை தவறினால் மத்திய அரசு தலையிடும்.

மாநில சுயாட்சி என்ற பெயரில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பது போல அமையக் கூடாது. தமிழக உளவுத்துறை கண்காணித்திருந்தால் முளையிலேயே கிள்ளி எறிந்து இருக்கலாம். டிஜிபி முதலில் ஒன்றை சொன்னார். பின்னர் சிறிய சிறிய வெடிகுண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்டார்கள் என்றார்.

ஏன் வெடிமருந்து அளவை வெளியிடுவதில் தயக்கம்? 1.5 டன் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசியல் இயக்கமாக வெற்றிகரமாக இயங்க தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். வரலாற்று தவறுகளை திருத்திக் கொள்ளாமல் உள்ள கட்சி திமுக‌‌ என்று சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.