மேற்குவங்கத்தை நோக்கி அதிவேகமாக நகரும் சிட்ரங் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சாகர் தீவில் இருந்து 380 கிலோ தொலைவில் மையம் கொண்டுள்ள சிட்ரங் புயல், நாளை காலை வங்க தேசத்தின் டின் கோனா மற்றும் சாண்ட்விப் தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலால் மேற்கு வங்கத்தின் பர்கனாஸ், மிட்னாபூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போல, வங்கதேசத்தின் கடலோர மாவட்டங்களும் பாதிக்கக் கூடும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.