
யாரையும் காதலிக்கவில்லை – அனு இமானுவல்
துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அனு இமானுவல். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார். தற்போது அங்கு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷை இவர் காதலிப்பதாகவும், இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து செய்தி பரவி வருகிறது. ஆனால் இதை மறுத்துள்ள அனு இமானுவல். அவர் கூறுகையில், ‛‛நான் யாரையும் காதலிக்கவில்லை, யாருடனும் சேர்ந்து வாழவும் இல்லை. இப்போதைக்கு திருமணம் செய்யும் ஆசை இல்லை. என் முழு கவனமும் சினிமாவில் தான் உள்ளது'' என்றார்.