ரூ.1350 கோடியில் சொகுசு பங்களா! கடற்கரையுடன் .. இன்னும் பல வசதிகள்


துபாயில் இந்திய மதிப்பி்ன் படி ரூ.1347 கோடியில் சொகுசு பங்களாவை வாங்கியிருக்கிறார் முகேஷ் அம்பானி.

துபாயின் பாம் ஜீமேரா தீவில் அமைந்துள்ள பங்களா சொந்தமாக்கி இருக்கிறார் முகேஷ் அம்பானி.

குவைத் தொழிலதிபரிடமிருந்து வாங்கப்பட்ட இந்த சொத்து தான், அதிகபட்ச விலையுயர்ந்ததாக கருதப்படுகிறது.

செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த தீவில் சொத்துக்களை வாங்கி குவிக்க தொழிலதிபர்கள், பிரபலங்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரூ.1350 கோடியில் சொகுசு பங்களா! கடற்கரையுடன் .. இன்னும் பல வசதிகள் | Mukesh Ambani Expensive Villa

இந்நிலையில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ள வீட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

அழகான இயற்கை சூழ் தீவின் வடக்கு பக்கம் அமைந்துள்ள பங்களாவில், 11 படுக்கையறைகள், உள் மற்றும் வெளிப்புற நீச்சல் குளம் அமையப்பெற்றுள்ளது.

ரூ.1350 கோடியில் சொகுசு பங்களா! கடற்கரையுடன் .. இன்னும் பல வசதிகள் | Mukesh Ambani Expensive Villa

மிக முக்கியமாக 70 மீற்றர் நீளமுடைய தனிப்பட்ட கடற்கரையையும் கொண்டதாகும்.

தற்போதைய சூழலில், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியிடம் சுமார் 84 பில்லியன் டொலர்கள் சொத்துக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.