தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பாலக்கோம்பையைச் சேர்ந்த அஜித் என்ற இளைஞர் நேற்றிரவு அதே பகுதியை சேர்ந்த சிவபிரகாஷ் என்பவர் தோட்டத்தில் சென்ற போது அங்குள்ள 150 அடி ஆழமுள்ள கிணற்றில் கால் தவறி விழுந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அஜித்தை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.