T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள்

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரண்டு லீக் போட்டிகள் நடக்கின்றன. ஹோபர்ட்டில் இலங்கை நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ,ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது.

முதல் சுற்றில் பெற்ற 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள நெதர்லாந்து அணி, சூப்பர்12 சுற்றிலும் ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் முனைப்புடன் தயாராகியுள்ளது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 3 முறை நேருக்கு மோதியுள்ளன. இதில் 2-ல் வங்காளதேசமும், ஒன்றில் நெதர்லாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஆட்டம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடுகளான பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி, கிரேக் எர்வின் தலைமையிலான ஜிம்பாப்வேயுடன் (குரூப்2) மோதுகிறது.

அண்மை காலமாக ஓட்டங்கள் எடுக்க முடியாமல் தடுமாறும் தென்ஆப்பிரிக்க அணித்தலைவர் பவுமா பார்முக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளார். தென்ஆப்பிரிக்க அணி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வேயிடம் ஒரு போதும் தோற்றதில்லை. இதற்கு முன்பு மோதியுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.