அக்ஷதா மூர்த்திக்கு ரூ.127 கோடி இன்போசிஸ் வழங்கிய ஈவுத்தொகை

புதுடில்லி :பிரிட்டனின் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள ரிஷி சுனக்கின் மனைவி, அக்ஷதா மூர்த்தி, ‘இன்போசிஸ்’ நிறுவனத்திடமிருந்து ஈவுத்தொகையாக, நடப்பு ஆண்டில் 126.61 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.
அக்ஷதா மூர்த்தி, இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் இவர், நடப்பு ஆண்டில், இந்நிறுவனத்திடமிருந்து ஈவுத் தொகையாக 126.61 கோடி ரூபாயை பெற்று
உள்ளார்.அக்ஷதா மூர்த்தி வசம், இன்போசிஸ் நிறுவனத்தின் 3.89 கோடி பங்குகள் அதாவது, 0.93 சதவீத பங்குகள் உள்ளன.

இன்றைய நிலையில், இவரிடம் உள்ள இன்போசிஸ் பங்குகளின் மதிப்பு, கிட்டத்தட்ட 6 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.இன்போசிஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டுக்கான இறுதி ஈவுத் தொகையை, ஒரு பங்குக்கு 16 ரூபாய் எனும் வீதத்தில், கடந்த மே 31ம் தேதியன்று வழங்கி
உள்ளது. இடைக்காலஈவுத்தொகையாக, ஒரு பங்குக்கு 16.50 ரூபாய் எனும் வீதத்தில் அண்மையில் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மொத்தம்ஒரு பங்குக்கு 32.50 ரூபாய் வீதம், ஈவுத் தொகையை நடப்பு ஆண்டில் வரப்பெற்றுள்ளார், அக்ஷதா மூர்த்தி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.