அமெரிக்காவின் மிசெளரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்து ஒரு இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர். திங்கட்கிழமை காலை 9.10 மணியளவில் பள்ளிக்குள் புகுந்த 20 வயதான இளைஞர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் பள்ளிக்கு விரைந்த போலீசார், அந்த இளைஞனை சுட்டுக் கொன்றனர்.
பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த நபர் யார்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.