ஆமா… ஆசீஷ் நெஹ்ராவா? ரிஷி சுனக்கா? பாவம்… கன்ஃபியூஸ் ஆன நெட்டிசன்கள்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் (42) இங்கிலாந்து நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியர்கள் பெருமைப்படும் விஷயமாக பார்க்கப்படுகிறது. இன்றைய தினம் இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இந்து பிரதமர், வெள்ளையர் அல்லாத முதல் பிரதமர், இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பிரதமர் என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கையில் திடீரென ஆசீஷ் நெஹ்ரா உள்ளே புகுந்திருக்கிறார்.

அவர் எப்படி இங்கே? எனக் கேட்கிறீர்களா… அவராக வரவில்லை. ரிஷி சுனக், ஆசீஷ் நெஹ்ரா இடையிலான உருவ ஒற்றுமையால் நெட்டிசன்கள் சிலர் தவறுதலாக களமிறக்கி விட்டுள்ளனர். அந்த தவறை திருத்துகிறோம் என்று கிளம்பி இருவரையும் ஒப்பிட்டு மீம்ஸ் மழையாய் பொழிந்து வருகின்றனர். சிலர் வேண்டுமென்றே ஆசீஷ் நெஹ்ரா போட்டோவை பதிவிட்டு அடுத்த இங்கிலாந்து பிரதமருக்கு வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளனர்.

பின்வாங்கிய பென்னி மோர்டாண்ட்… பிரிட்டன் புதிய பிரதமரானார் ரிஷி சுனக்!

இதில் சுவாரஸியமூட்டும் மீம்ஸ்கள் பல இடம்பெற்றுள்ளன. இருவரது புகைப்படங்களையும் பதிவிட்டு ”ஆசீஷ் நெஹ்ராவும், ரிஷி சுனக்கும் சகோதரர்களை போல இருக்கின்றனர். ஏதேனும் ஒரு கும்ப மேளாவில் எதிர்பாராத விதமாக பிரிந்திருக்கக் கூடும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளனர். ஒருமுறை ஆசீஷ் நெஹ்ரா சிறுவயது விராட் கோலிக்கு பரிசு ஒன்றை வழங்குவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

அதனை சிலர் ”விராட் கோலியுடன் ரிஷி சுனக். மிகவும் பெருமைக்குரிய தருணம்” என்று தவறுதலாக பதிவிட்டுள்ளனர். இதை வேண்டுமென்றே செய்பவர்களும் சிலர் இருக்கின்றனர். ஒருபடி மேலே போய் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசீஷ் நெஹ்ராவிற்கு வாழ்த்துகள் என்று நக்கல் செய்துள்ளனர். அப்படியே அந்த கோஹினூர் வைரத்தை நமது நாட்டிற்கு கொண்டு வந்துவிடுங்கள் என்று விட்டதை பிடிக்க பிளான் போட்டு அதகளம் செய்து வருகின்றனர்.

கோஹினூர் வைரமானது 105.6 கேரட் ஆகும். இந்தியாவில் 14ஆம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பலரது கைகளுக்கு மாறிச் சென்று இறுதியாக பிரிட்டிஷ்காரர்கள் கைகளை அடைந்தது. இதையடுத்து அந்நாட்டு மகுடத்தில் பொருத்தி வைக்கப்பட்டது. இந்த வைரம் இந்தியாவிற்கே சொந்தம் என பல ஆண்டுகளாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

யார் இந்த ரிஷி சுனக்? இன்னமும் குறையாத அந்த இந்தியப் பாசம்…!

இந்த சூழலில் கோஹினூர் வைரத்தை மீட்க பிளான் ஒன்றை பதிவிட்டிருப்பது தான் ஹைலைட். ரிஷி சுனக்கை இந்தியாவிற்கு வரவழைத்து, அவரது மாமனார் வீட்டிற்கு செல்லும் போது கடத்தி விட வேண்டும். அப்படியே பெங்களூரு ட்ராப்பிக்கில் மாட்டி விட்டுவிட வேண்டும். உடனே ஆசீஷ் நெஹ்ராவை இங்கிலாந்து பிரதமராக ஆள்மாற்றம் செய்து அனுப்பி கோஹினூர் வைரத்தை கொண்டு வர சட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்று பதிவிட்டு பரபரப்பை கிளப்பி விட்டுள்ளனர்.

ரிஷி சுனக் பற்றி சில விஷயங்கள்… இந்திய பாரம்பரியத்தை இன்னும் மறக்காமல் இருக்கிறார். பகவத் கீதை மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதன்வழி வாழ்வதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறார். யார்க்‌ஷைர் எம்.பியாக பதவியேற்ற போது பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டது கவனிக்கத்தக்கது. தீபாவளியை ஒட்டி விளக்குகள் ஏற்றி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.