பீஜிங் : இந்திய எல்லையோர பகுதிகளில் பணியாற்றிய சீன ராணுவ அதிகாரிகளுக்கு, அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் பதவி உயர்வு அளித்துள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில்தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் ஜிங்பிங் தொடரும் வகையில் பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் சட்டத்திலும் இதற்கான திருத்தம் செய்யப்பட வேண்டும்.
ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், ஜிங்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் தொடரும் வகையில் சட்டத் திருத்தம் செய்யும் தீர்மானம் ஒருமனதாகநேற்று முன்தினம்நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கட்சியிலும், ஆட்சியிலும் தன் நம்பிக்கைக்குரியவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், ஜிங்பிங். குறிப்பாக இந்திய எல்லையோர பகுதிகளில் பணியாற்றிய மூன்று ராணுவ அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளித்து ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ஜெனரல் ஹீ வெங்டாயக், சீன மத்திய ராணுவ கமிஷனின் துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஜிங்பிங்கிற்கு மிகவும் நெருக்கமான ஜெனரல் ஜாங் யூக்சியா, ராணுவத்தின் முதல் அந்தஸ்து துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும், ஜெனரல் ஹூ குய்லிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர, சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான வாங் யீ, கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement