இன்று பகுதி சூரியகிரகணம் இடம்பெறுகிறது.
இலங்கையில் இன்று (24) பகுதி சூரியகிரகணத்தை காணக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவின் பணிப்பாளரான பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
பிற்பகல் வேளையில் நாட்டின் சில பிரதேசங்களில் இந்த சூரிய கிரகணம் தென்படும். மாலை 5.27 மணி முதல் யாழ்ப்பாணத்தில் 22 நிமிடங்களும்இ கொழும்பில் 5.43 முதல் 9 நிமிடங்களும் சூரிய கிரகணம் தென்படும் என்று அவர் கூறினார்.
நாட்டின் தென் பகுதியில் சூரிய கிரகணத்தை காண முடியாது. இலங்கையில் மீண்டும் ஐந்து வருடங்களின் பின்னரே சூரிய கிரகணம் தோன்றும் என்றும் பேராசிரியர் சந்தன ஜயரட்ன மேலும் தெரிவித்தார்.
முழுநிழல் பகுதியில் இருக்கும் ஒருவரால் சூரியனைக் காண இயலாது. சூரியனின் தோற்றத்தை நிலவு முழுமையாக மறைத்துவிடும். இது முழு சூரிய கிரகணமாகும்.புறநிழல் பகுதியில் சூரியனின் ஒரு பகுதியிலிருந்து வரும் ஒளி மட்டும் வந்தடையும்.
புறநிழல் பகுதியில் இருக்கும் ஒருவர் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் காண்பர். மீதப்பகுதியை நிலவு மறைத்திருக்கும். இது பகுதி சூரிய கிரகணமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.