இலங்கையில் Disneyland கேளிக்கை பூங்கா ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘அநேகமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, Disneyland பூங்காவை இலங்கையில் அமைப்பது குறித்து என்னுடன் கலந்துரையாடினர். உலக நாடுகளில் டிஸ்னிலேண்ட்டை அமைத்தவர்கள் என்னுடன் கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் டிஸ்னிலேண்ட்டை இலங்கையிலும் அமைக்க எதிர்பார்த்துள்ளனர். அதன் மூலம் எமக்கு, ஏராளமான சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு ஈர்க்க முடியும்’ என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.