உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு


கதிர்வீச்சுக்களை வெளிப்படுத்தும் அணுகுண்டை போரில் உக்ரைன் பயன்படுத்தும் என்று ரஷ்யா கவலைப்படுவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்கள் உக்ரைன் விவகாரம் குறித்து தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இதன்போதே மேற்கண்டவாறு ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் மறுப்பு

உக்ரைன் அணுகுண்டை பயன்படுத்த திட்டமிடுகிறது: ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு | Russias Claim Ukraine Plans Use Dirty Bomb

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சரால் முன்வைக்கப்பட்ட இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் ரஷ்யா வழங்காத போதிலும், உக்ரைனில் நிலைமை கட்டுப்பாட்டை இழந்து மிகவும் மோசமாக சென்று கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு பிரிட்டன் தரப்பு மறுத்துள்ளது. இதேபோல் ரஷ்யாவின் கவலை மற்றும் குற்றச்சாட்டை உக்ரைனும் மறுத்துள்ளது.

ஐரோப்பாவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய திறன் ரஷ்யாவுக்கு மட்டுமே உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.