பரேலி, உத்தர பிரதேசத்தில், குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
உ.பி.,யின் பரேலி மாவட்டம், மிலாக் அலிகஞ்ச் கிராமத்தில் வயல் வேலை செய்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு, அவர்களின் மகன்கள் உணவு எடுத்து சென்றனர். உணவு கொடுத்து விட்டு திரும்பும் போது, வழியில் இருந்த குளத்தில் குளித்தனர்.
அப்போது மூவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். ஆசிஷ், 8, சுமித், 7, லாவ் சாகர், 7, ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement