கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் ஜமேசா முபின் வீட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு மர்ம பொருள்களை ஜமேசா மூபின் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில் ஜமேசா முபின் உடன் வந்த மற்ற நான்கு நபர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த அனைத்து ஜமாத்துகளும் அவரின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை. அமைதியை விரும்புவதால் சமூக விரோத செயலில் துணை போன ஜமேசா முபின் உடலை அடக்கம் செய்ய மறுப்பதாக தெரியவந்தது. கோவையைச் சேர்ந்த அனைத்தும் ஜமாத்துகளும் மறுத்துவிட்ட நிலையில் கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ஜமாத் மனிதாபிமான அடிப்படையில் அடக்கம் செய்ய சமாதித்துள்ளது. இதன் காரணமாக ஜமேஷா மூபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.