துபாய் தொழிலதிபரை மணந்தார் நடிகை பூர்ணா

முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா எனும் ஷாம்னா கசீம். தொடர்ந்து கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் நடித்துள்ள இவர் இப்போது பிசாசு 2 உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

பூர்ணாவுக்கு சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஷானித் ஆசிப் அலி என்பவரும் நிச்சயதார்த்தம் நடந்தது. இடையில் இவர்கள் பிரிந்துவிட்டதாக செய்தி பரவிய நிலையில் அதை மறுத்து ஷானித்துடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் தற்போது ஷானித்தை திருமணம் செய்துள்ளார். துபாயில் இவர்கள் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

திருமண போட்டோக்களை பகிர்ந்து பூர்ணா பதிவிட்டுள்ளதாவது : ‛‛நான் யார் என்பதற்காக என்னை நேசித்தீர்கள், என்னை மாற்ற முயற்சிக்கவில்லை. என்னுள் சிறந்ததை வெளிக்கொணர நானே உழைக்க ஊக்கப்படுத்தினீர்கள். நம் நெருங்கிய உறவுவினர்களுக்கு மத்தியில் நானும், நீங்களும் இந்த அற்புதமான பயணத்தை துவங்குகிறோம். இது கொஞ்சம் அதிகம் என எனக்கு தெரியும். இன்ப, துன்பத்தில் எப்போதும் உங்களுடன் இருப்பேன். உங்கள் அன்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளிக்கிறேன்'' என்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.