அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் தங்கம் வென்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் செல்வன் யோகநாதன் சதீஸ்காந்தை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை (25) புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
பளுதூக்கல் போட்டி வரலாற்றில் முதல் தடவையாக கிழக்கு மாகாணம் முதல் தடவையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பாடசாலை அதிபர் அ.கு.லேந்திரராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சுஜாதா குலேந்திரகுமார் பிரதம அதிதியாகவும் கோட்டக்கல்விப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு ஆலயபரிபாலன சபையின் நிருவாக உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெரியார்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.