மார்க்கெட்டில் பிடித்த தீ… எரிந்து நாசமான 650 கடைகள்!

அருணாச்சல பிரதேச மாநிலம், இட்டாநகரில் நஹர்லகுன் டெய்லி எனும் பழமையான மார்க்கெட் உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 650 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. கடைகளுக்குள் எரிந்து சாம்பலான கடைக்களுக்குள் இருந்த பொருட்களின் மதிப்பு மொத்தம் 3 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு வெடிக்கப்பட்ட பட்டாசு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அப்பகுதி ம்க்கள், மார்க்கெட்டில் இருந்த பெரும்பாலான கடைகள் மூங்கில் மற்றும் மரக்கட்டைகளால் ஆனவை என்பதால் எளிதில் தீப்பற்றியதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவி்த்துள்ளனர்.

தீவிபத்து குறித்த தகவல் அறிந்தும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்தும், தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைப்பதற்கு போதுமான தண்ணீர் இல்லாமல் இருந்ததும்தான் தீ விபத்தில் அதிக சேதம் ஏற்பட காரணம் எனவும் அப்பகுதிவாசிகல் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விபத்தை முடிந்த அளவுக்கு தடுக்காமல், அலட்சியமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.