கோண்டா : உத்தர பிரதேசத்தில் பட்டாசு தயாரிப்பதற்காக வைத்திருந்த வெடிமருந்து வெடித்துச் சிதறியதில் பெண் பலியானார்; காயம் அடைந்த இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
உ.பி.,யின் கோண்டா மாவட்டத்தில் உள்ள நவாப்கன்ஜ் கிராமத்தில், சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து விற்க, ஒரு வீட்டில் வெடிமருந்தை பதுக்கி வைத்திருந்தனர். இது, திடீரென நேற்று காலையில் வெடித்துச் சிதறியது.
இதில், அந்த வீட்டைச் சேர்ந்த கைருன்னிஷா,52, என்ற பெண் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது மகன் இப்ராஹிம்,32 மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement