
ஹன்சிகாவின் ‛கார்டியன்'
மஹா படத்திற்கு பின் ‛105 நிமிடங்கள், ரவுடி பேபி' உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இவற்றில் சபரி – குரு சரவணன் இயக்கத்தில் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் வாலு சந்தர் தயாரிக்கிறார். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இந்த படத்திற்கு ‛கார்டியன்' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பேய் போன்று மிரட்டும் வேடத்தில் ஹன்சிகா உள்ளார். ஹாரர் கலந்த திரில்லராக இந்த படம் உருவாகிறது. சாம் சிஎஸ் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.