1,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவிருக்கும் சுமார் 1 மில்லியன் பிரித்தானிய மக்கள்: எச்சரிக்கை செய்தி


கடந்த ஆண்டில் மட்டும் 926,000 சாரதிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டதாக தகவல்

புதுப்பிக்க தவறிய சாரதிகளுக்கு கண்டிப்பாக 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க வாய்ப்பு

பிரித்தானியாவில் காலாவதியான ஓட்டுநர் உரிமங்களை வைத்திருந்த சுமார் 1 மில்லியன் சாரதிகள் 1000 பவுண்டுகள் அபராதம் செலுத்த உள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் DVLA வெளியிட்ட தகவலில், கடந்த ஆண்டில் மட்டும் 926,000 சாரதிகளின் உரிமங்கள் காலாவதியாகிவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஓட்டுநர் உரிமமானது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் நிலையில்,
புகைப்பட அட்டையில் உள்ள படம் சாரதியின் தோற்றம் என்பதை உறுதிப்படுத்த புதுப்பிக்க வேண்டும்.

ஆனால், புதுப்பிக்க தவறிய சாரதிகளுக்கு கண்டிப்பாக 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளதாகவும், எந்த ஓட்டுநர் காப்பீடும் இதில் செல்லாது எனவும் கூறுகின்றனர்.

1,000 பவுண்டுகள் அபராதம் செலுத்தவிருக்கும் சுமார் 1 மில்லியன் பிரித்தானிய மக்கள்: எச்சரிக்கை செய்தி | Facing Fine For Not Renewing Driving Licence

@getty

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுவதும் கிரிமினல் குற்றமாகும் என்பதால், காலாவதியான உரிமத்துடன் வாகனம் ஓட்டுவது, ஓட்டுநர்களுக்கு வரம்பற்ற அளவு அபராதம் மற்றும் தகுதி நீக்கம் ஆகியவற்றிற்கு காரணமாக அமைகிறது.

ஒவ்வொரு 50 ஓட்டுநர்களில் ஒருவருக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உரிமம் காலாவதியாகிவிட்டதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
உரிமம் காலாவதியாகிவிட்டது என்பதை 56 நாட்களுக்கு முன்னர் ஒவ்வொரு சாரதிக்கும் DVLA நினைவூட்டி வருகிறது.

செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு, கடந்த 3 ஆண்டுகளின் குடியிருப்பு முகவரிகள், தற்போதைய ஓட்டுநர் உரிமம் மற்றும் தேசிய காப்பீட்டு எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க £14க்கு மேல் செலவாகும்.
மேலும், புதுப்பிக்க எடுத்துக்கொள்ளப்படும் நாட்களில் சாரதிகள் தங்களை வாகனங்களை பயன்படுத்த தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.