அணு ஆயுதப் பயிற்சியை தொடங்கினார் புடின்: எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை


ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.


எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்பு.

உக்ரைன் உடனான போரில் ரஷ்யா மிகப் பெரிய தாக்குதலை தூண்டக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ரஷ்ய படைகள் அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொள்வதை விளாடிமிர் புடின் பார்வையிட்டார்.

ரஷ்ய ராணுவ படையினரால் சில காலமாக திட்டமிடப்பட்டு இருந்த அணு ஆயுதப் பயிற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன, இதில் நாட்டின் அணுசக்தி படைகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளின் பல பயிற்சிகளை மேற்கொண்டனர்.

அணு ஆயுதப் பயிற்சியை தொடங்கினார் புடின்: எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை | Ukraine War Putin Oversees Practice Nuclear StrikeSky News

இந்த பயிற்சியில் யார்ஸ் நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM), ரஷ்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்பட்டது மற்றும் Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானங்கள் பயிற்சி இலக்குகளை நோக்கி செலுத்தியது.

இதனை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அலுவலகத்தில் இருந்து வீடியோ இணைப்பு மூலம் மேற்பார்வையிட்டார்.

இது தொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்த கருத்தில், ஜனாதிபதி புடின் இந்த பயிற்சியை மேற்பார்வையிட்டார், மேலும் எதிரிகளின் அணுசக்தி தாக்குதலுக்கு பதிலடியாக ஒரு பெரிய அணுசக்தி தாக்குதலை வழங்குவதற்கான பயிற்சியை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அணு ஆயுதப் பயிற்சியை தொடங்கினார் புடின்: எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை | Ukraine War Putin Oversees Practice Nuclear StrikeSky News

கூடுதல் செய்திகளுக்கு: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வாடகை தாய் விவகாரம்: விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

இந்த அணு ஆயுதப் பயிற்சியானது, ரஷ்யாவின் பிரதேசத்தின் மீதான தாக்குதல்களை தடுக்க கிடைக்கும் அனைத்து வழிகளையும் ரஷ்யா பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக புடின் எச்சரித்ததை தொடர்ந்து அரங்கேறியுள்ளது .



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.