பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில், கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு, ஒற்றைத் தலைமை உருவாகி உள்ளது. ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக,
தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார். எனினும் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமியின் கையே ஓங்கி இருக்கிறது.
இதற்கிடையே, வரும் 30 ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்
கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி செல்ல மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் முழு அதிகாரம் விரைவில் தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் என,
தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது அவரது ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய் துறை வசம் ஒப்படைக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.