துபாய்,-ஈரானில், ஷியா பிரிவினரின் புனித தலத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதில், ௧௫ பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
மேற்காசிய நாடான ஈரானில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானின் தென் பகுதியில் உள்ள ஷிராஸ் நகரில், துப்பாக்கி ஏந்திய மூன்று நபர்கள், ஷியா பிரிவினரின் புனித தலத்துக்குள் புகுந்து கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், அப்பாவி மக்கள் ௧௫ பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போலீசார் இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.
கடந்த காலங்களில், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஷியா பிரிவினரின் புனித தலங்களை குறி வைத்து, சன்னி பிரிவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் தற்போது நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement