ஸ்ரீநகர் :ஜம்மு – காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் டாங்தார் செக்டரில், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே ஊடுருவ முயன்றோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பி மறைந்தனர். சுட்டுக் கொல்லப்பட்டவர் பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகமது ஷகுர், 32, என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement