ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி (38 வயது) என்பவருக்கு அற்புத அற்புதராஜ் என்ற கணவர் இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்துள்ளனர். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட தனது குழந்தைகளுடன் ஆரோக்கியமேரி தனியே வசித்து வந்துள்ளார்.
ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவருக்கு நேற்று அதிகாலை நேரத்தில் வயிற்று வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். சிகிச்சை பெற்று விட்டு வீட்டிற்கு திரும்பிய நிலையில், நேற்று இரவு மீண்டும் ஆரோக்கிய மேரிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவருடைய மகன் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தாயை அழைத்துச் சென்றார். அப்பொழுது, ஆரோக்கிய மேரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் ஆரோக்கிய மேரி ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மகன் மற்றும் மகள் இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கிய மேரி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
ஆரோக்கிய மேரி தகாத உறவினால் கர்ப்பமாகி அந்த கர்ப்பத்தை கலைக்க மருந்து உட்கொண்டு அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகபடுகின்றனர்.