வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் நகரில் காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை செங்கல்லால் தாக்கி கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தர பிரதேசத்தில் காஜியாபாதில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வருண், 35, என்பவர் நேற்று இரவு வந்தார்.அங்கு தன் காரை ஓரமாக நிறுத்தினார். அப்போது, பக்கத்தில் ஏற்கனவே காரை நிறுத்தியிருந்தவர்கள், வருணை வேறு இடத்தில் காரை நிறுத்துமாறு கூறினர். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
![]() |
மற்றொரு காரில் வந்த நபர்கள் திடீரென அங்கு கிடந்த செங்கல்லை எடுத்து வருண் தலையில் சரமாரியாக தாக்கினர்.இதில் அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வருண் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த ஒரு நபர் மொபைல் போனில் ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதை ஏராளமானோர் பகிந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காஜியாபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொலைக் கும்பலை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement