சசிகலா புஷ்பா வீட்டிற்கு சீல்… தூக்கி வீசப்பட்ட பொருட்கள்- கறார் காட்டிய ஆபிசர்ஸ்!

சசிகலா புஷ்பா என்றால் கூடவே சர்ச்சைகளும் ஓடி வந்து விடுகின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் சர்ச்சையாக நிகழ்ந்திருப்பது டெல்லி அரசு இல்லத்திற்கு சீல். அவர் வசித்து வந்த வீட்டிற்கு தான் அதிகாரிகள் சீல் வைத்து, அங்கிருந்த பொருட்களை தூக்கி வெளியே வீசியுள்ளனர். இவ்வளவு கெடுபிடியாக அதிகாரிகள் ஏன் நடந்து கொண்டனர்? என்று விசாரிக்கையில் தான் தெரியவந்தது விஷயம் வேறு மாதிரி என்று.

முன்னதாக அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பாவிற்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்.பி சீட் (03-04-2014) ஒன்று காலியான போது, அதை சசிகலாவிற்கு கொடுத்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. இதையொட்டி டெல்லியில் தங்குவதற்கு மத்திய அரசு வீடு ஒன்றை ஒதுக்கியிருந்தது. 2016ல் ஜெயலலிதா மறைவால் அதிமுக ஆட்டம் கண்டது. அணிகள் பிளவுபடத் தொடங்கின. ஒருவழியாக 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நிறைவு செய்தார். இதற்கிடையில் 2020ல் சசிகலா புஷ்பாவின் மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் (02-04-2020) முடிவடைந்தது.

பின்னர் கட்சியில் மவுனம் காத்திருந்த அவர், திடீரென பாஜகவில் இணைந்தார். இந்த இடத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எம்.பி பதவிக்காலம் நிறைவடைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும் டெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்யாமல் இருந்தார். இதுதொடர்பாக சசிகலா புஷ்பாவிற்கு பலமுரை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் பொறுத்து பொறுத்து பார்த்த அதிகாரிகள் அதிரடியில் இறங்கினர். இன்றைய தினம் சசிகலா புஷ்பாவின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் தூக்கி வந்து வெளியே வைத்து விட்டனர். பின்னர் அரசு வீட்டிற்கு சீல் வைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.