ராஜ்நந்த்காவ்ன்:சத்தீஸ்கரில் விவசாயி ஒருவரை நக்சல்கள் நேற்று சுட்டுக் கொன்றனர்.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அம்பாகர் சவுக்கி மாவட்டத்தில் உள்ள துக்காம் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சித் தோப்போ, ௩௨, என்ற விவசாயி, நேற்று தன் நிலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, நக்சல்கள் அவரை வழிமறித்து, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், விவசாயியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் விவசாயியின் தலை கோடாரியால் வெட்டப்பட்டதற்கான காயமும் காணப்பட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, கொலைக்கான காரணம் தெரியும். குற்றவாளிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement