ஹைதராபாத் :தெலுங்கானாவில், ஒரு வீட்டில் சமையல் சிலிண்டர் வெடித்ததில், ஒருவர் உயிரிழந்தார்; எட்டு பேர் பலத்த காயமடைந்தனர்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹைதராபாத் அருகே உள்ள சில்கால்குடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சிலிண்டரில் இருந்து ‘காஸ்’ கசிந்துள்ளது.
அதே நேரத்தில் மின் கசிவும் ஏற்பட்டதால், சிலிண்டர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், சேதமடைந்த நான்கு வீடுகளில் ஒரு வீட்டைச் சேர்ந்த நாராயணசாமி, ௫௫, என்பவர் உயிரிழந்தார்.
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர்; இவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement