ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டத்தில் மின்மாலமுடி என்ற வனப்பகுதியில் ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார். அதன் பின் மயக்கம் தெளிந்த அந்த பெண் அருகில் இருந்த கிராமத்திற்கு சென்று உதவி கேட்க அவர்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் செங்குன்றத்தில் உள்ள மருத்துவமனைக்கு அந்த பெண் கொண்டு செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. இத்தகைய சூழலில், இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த நதியா (34 வயது_ என்ற பெண்ணை மர்ம நபர்கள் சிலர் கடத்தி வந்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
அப்பொழுது, நதியா அந்த வனப்பகுதியில் சுயநினைவை இழந்து மயங்கி இருக்கிறார். எனவே, நதியா இறந்துவிட்டார் என்று எண்ணிய அந்த கும்பல் அவரை அப்படியே போட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர்.
மயக்கம் தெளிந்த நதியா கிராம பகுதியில் வந்து உதவி கேட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் இந்த குற்றத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.