டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா


பெர்த்தில் செவ்வாய்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஸ்டேஜ் குரூப் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ஓட்டங்களை குவித்தது.

மார்கஸ் ஸ்டோனிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்கள் எடுத்தது அவுஸ்திரேலிய இன்னிங்ஸின் சிறப்பம்சமாக இருந்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிஸ்சங்க 40 ஓட்டங்களையும், சரித் ஜோஷ் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.

டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா | T20 Worldcup 2022 Australia Sri Lanka 7 Wickets

அவுஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் அகர், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா 16.3 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்கள் எட்டி வென்றது. அவுஸ்திரேலிய தரப்பில் மாா்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகன் ஆனாா்.

டேவிட் வாா்னா் 11 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட, தொடா்ந்து வந்த மிட்செல் மாா்ஷ் 18, கிளென் மேக்ஸ்வெல் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 23 ஓட்டங்கள் சோ்த்து கேப்டன் ஆரோன் ஃபிஞ்சோடு இணைந்து அணியின் ஸ்கோரை உயா்த்தி ஆட்டமிழந்தனா்.

டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா | T20 Worldcup 2022 Australia Sri Lanka 7 Wickets

அப்போது அவுஸ்ஸ்திரேலியா சற்று தடுமாற்றத்துடன் இருந்த நிலையில் களம் கண்ட மாா்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கை பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸராக சிதறடித்தாா்.

இதனால் வெற்றிக்கான ஓட்டங்கள் தேவை மளமளவென குறைந்தது. ஒரு கட்டத்தில் பற்றாக்குறையாக இருந்த பந்து எண்ணிக்கையை, உபரியாகும் வகையில் அவரது விளாசல் இருந்தது.

17-ஆவது ஓவரிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த ஸ்டாய்னிஸ் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 59, ஆரோன் ஃபிஞ்ச் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தனஞ்ஜெயா, சமிகா, மஹீஷ் தீக்ஷனா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

அவுஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை கண்ட நிலையில், தற்போது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதுபோல், இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக் கோப்பை: இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா | T20 Worldcup 2022 Australia Sri Lanka 7 Wickets

இந்த ஆட்டத்தில் ஸ்டாய்னிஸ் 17 பந்துகளில் அரைசதம் அடித்தாா். இதுவே ஆஸ்திரேலிய வீரா் ஒருவரால் அடிக்கப்பட்டுள்ள அதிவேக அரைசதம் ஆகும். அதுவே, டி20 உலகக் கோப்பை போட்டியில் இது 2-ஆவது அதிவேக அரைசதம். இந்தியாவின் யுவராஜ் சிங் (12 பந்துகள்-2007) முதலிடத்தில் இருக்க, தென்னாப்பிரிக்காவின் ஸ்டெஃபானஸ் மைபா்க்குடன் (17 பந்துகள் – 2014) ஸ்டாய்னிஸ் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொண்டுள்ளாா்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.