பெங்களூரு : பெங்களூரில் பட்டாசு வெடித்து 11 பேர் காயம் அடைந்தனர். தாவணகரேயில் கடை எரிந்து சேதம் அடைந்தது.
பெங்களூரில் பட்டாசு வெடித்து காயமடைவது ஆண்டுதோறும் வழக்கமாகி வருகிறது. அதுபோல இந்த ஆண்டும் கடந்த 23ம் தேதி முதல் நேற்று வரை 11 பேர் பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்தனர். இதில், கலாசிபாளையாவை சேர்ந்த சுரேஷ், 35 என்பவர் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஜே.பி., நகரை சேர்ந்த மனோஜ், 10 என்பவருக்கும் முகம் முழுக்க தீக்காயம் ஏற்பட்டு கருகி விட்டது. அவரது கண், உடலிலும் பலமான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தனிசந்திராவை சேர்ந்த சாமுவேல், 7 என்ற சிறுவன் ராக்கெட் விடும்போது வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. பிரேசர் டவுன் ஆதித்யா, 7, ஸ்ரீநகர் மதன், 18 ஆகியோருக்கும் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பட்டாசு விபத்தில் காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிக்க மின்டோ மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், பெலகாவி கித்துாரில் உள்ள கித்துார் நகரில் பட்டாசு பொறி குஷன் கடையில் விழுந்ததில் கடை எரிந்து சாம்பல் ஆனது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement