புதிய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி புகைப்படத்துடன் சேர்த்து விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தோனேசிய நாட்டின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் அச்சிடப்பட்டு இருப்பதாகவும், அதுபோல் நாம் ஏன் அச்சிடக் கூடாதென்றும் கேள்வியெழுப்பிய கெஜ்ரிவால், இதுதொடர்பாக மத்திய அரசுக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளதாகவும் கூறினார்.
நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்தப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கையுடன் சேர்த்து, கடவுளின் ஆசீர்வாதமும் நமக்கு தேவைப்படுகிறது என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.