பெங்களூரு : பெங்களூரில், இரண்டு நாட்களாக வெப்பநிலை குறைந்து, குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது. அடுத்த மூன்று நாட்கள், இதே சூழ்நிலை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:
வடகிழக்கு பருவ மழை இன்னும் துவங்கவில்லை என்றாலும், ஈஷான்ய திசையில் இருந்து, குளிர் காற்று வீச துவங்கியது. எனவே பெங்களூரில், இரண்டு நாட்களாக வெப்பநிலை குறைந்துள்ளது.
சில நாட்களுக்கு முன், குறைந்தபட்ச வெப்பநிலை, 19 முதல் 20 டிகிரி செல்ஷியசாக இருந்தது. தற்போது 16 டிகிரி செல்ஷியசாக குறைந்துள்ளது. இதனால் காலை பனி மூட்டமான சூழ்நிலை நிலவுகிறது. குளிரும் அதிகரிக்கிறது. அக்டோபர் 28 வரை, இதே சூழ்நிலை நீடிக்கும்.
அதன்பின் படிப்படியாக, வெப்ப நிலை அதிகரித்து, இயல்பு நிலைக்கு வரும். அப்போது 28 முதல் 29 டிகிடி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது.
அக்டோபர் 28க்கு பின், பெங்களூரில் மீண்டும் சாதாரண அல்லது கன மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement