மோடியின் வீழ்ச்சி இவரால் மட்டுமே நிகழும்… ஆம் ஆத்மி நம்பிக்கை!

ஆத் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய கரன்சி நோட்டுகளில் இந்து தெய்வங்களான லக்ஷ்மி, விநாயகர் ஆகியோரின் படங்களை சேர்க்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மகாத்மா காந்தி படத்துடநஅ இந்த படங்களையும் சேர்ப்பது இந்தியாவுக்கு செழிப்பைக் கொண்டுவரும் என்று அவரது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை மேற்கோள் காட்டுமாறு ஆம் கெஜ்ரிவால் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளார்

2022 டிசம்பரில் வரவிருக்கும் டெல்லி மாநகராட்சி எம்சிடி தேர்தலில், டெல்லி மக்கள் பாஜகவை நிராகரிப்பார்கள்; ஆம் ஆத்மி கட்சி முழுமையாக டெல்லி மாநகராட்சிகளை கைப்பற்றி மேலும் தன் மக்கள் சேவையை விரிவுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களின் எதிர்காலம்!: அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களால் மட்டுமே டெல்லி, பஞ்சாப் போல் இந்திய மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை கொடுத்து ஊழலை ஒழித்து, சாதி மத, பேதமற்ற இந்தியாவை உருவாக்கி தர முடியும். இதற்கு ஒரே வழி, மதவெறி அரசியல், கார்ப்பரேட் தரகர்களின் கட்சியாக விளங்கும் பாஜகவை வீழ்த்துவது மட்டுமே!

ஆம் ஆத்மி கட்சியின் உண்மையான வளர்ச்சியை கண்டு அஞ்சும் பாஜக, .அரவிந்த் கெஜ்ரிவாலை இந்து விரோதி என சித்தரிக்க தொடங்கினார்கள், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடுகளில் சிபிஐ சோதனைகள் நடத்தி அச்சுறுத்த முயன்றனர், சுகாதாரத் துறை அமைச்சர் சத்யந்திரா ஜெயினை பொய் வழக்கில் கைது செய்து 4 மாதங்கள் சிறையில் அடைத்தன.

பஜாவின் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாத ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால், முல்லை முல்லால் எப்படி எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அதை டெல்லி, பஞ்சாப் தேர்தல்களில் நிரூபித்து காட்டியவர், தொடர்ந்து ஹிமாச்சல் பிரதேசம், குஜராத் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் நிரூபிப்பார். தேர்தலில் மற்ற எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பார்த்திராத அமோக வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பெரும்.

பாஜகவிடமிருந்து தேசம் மீட்போம்! மனித நேயம் காப்போம்!! மத நல்லிணக்கம் வளர்ப்போம்!!’ என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.