தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் பகுதிக்கு அருகில் இருக்கின்ற ஸ்ரீவைகுண்ட பெருமாள்புரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமணன் என்பவரின் மகன் தான் பூபதிராஜா (வயது 28).
இவர் டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் பவர் பிளாண்ட் ஒன்றில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. தமிழகத்தில் இந்த ரம்மி விளையாட்டு தடை செய்யப்படுவதற்கு முன்பாக பூபதிராஜா அதிக பணத்தை இழந்துள்ளார்.
இதன் பின், ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாகவே பூபதி ராஜா சோகமாக இருந்து வந்தார். இத்தகைய நிலையில் அவர் இப்படி இருப்பதை கண்டு பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இது அவருக்கு மேலும், மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூபதி ராஜா போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.