மைசூரு : பிரியா பட்டணாவின் நவிலுார் கிராமத்தில், வயலில் செழுமையாக வளர்ந்திருந்த இஞ்சியை, இரவோடு இரவாக திருடி சென்றுள்ளனர். விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
மைசூரு, பிரியா பட்டணாவின் நவிலுார் கிராமத்தில், நாளுக்கு நாள் இஞ்சி திருட்டு அதிகரிக்கிறது. வயலில் இருந்தே இரவோடு, இரவாக திருடுகின்றனர். நேற்று முன் தினம் நள்ளிரவு, மர்ம கும்பல் வயலில் நுழைந்து, இஞ்சியை திருடி சென்றனர்.
விவசாயிகள் வழக்கம் போன்று, காலை வயலுக்கு வந்த போது, வயல் சிதைந்து கிடப்பதையும், இஞ்சி திருடப்பட்டதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, மர்ம கும்பல் இஞ்சியை வெட்டி, லாரியில் கடத்தியது தெரிந்தது.
புகாரின்படி, பிரியா பட்டணா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. லாரி பதிவு எண்ணை வைத்து, திருடர்களை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
ஏற்கனவே இஞ்சி விலை சரிவால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இரவோடு, இரவாக திருடி செல்வதால் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement