மொரினா:மத்திய பிரதேசத்தில் விரைவு ரயில் மோதியதில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய பிரதேசத்தில், மொரினா மாவட்டத்தில் உள்ள சாங்க் ரயில்வே ஸ்டேஷனில், ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த அசோக் குமார், ௫௬, மற்றும் நவ்ராஜ் சிங், ௪௦, இருவரும், அருகிலிருந்த தண்டவாளத்தில் நின்று குவாலியர் – ஆக்ரா பயணியர் ரயிலை சோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில், புதுடில்லியில் இருந்து வேகமாக வந்த துரந்தோ விரைவு ரயில், இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தப்பிக்க வழியின்றி ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement