ஆரம்பத்தில் இருந்தே இளவரசர் ஹரியிடம் எச்சரிக்கையாக இருந்த ராணி கமிலா!


ராணி கமிலா இளவரசர் ஹரியைப் பற்றி எப்போதும் மிகவும் எச்சரிக்கையாகவும் அன்பாகவும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

ஹரி, இளவரசர் வில்லியம் இருவரும் ராணி கன்சார்ட் கமிலாவுடன் மிகவும் அன்பான உறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் இரண்டாவது மனைவி ராணி கமிலா இளவரசர் ஹரியிடம் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் எச்சரிக்கையாக இருந்தார் என்று ஒரு புத்தகம் கூறுகிறது.

Camilla, Duchess of Cornwall: From Outcast to Future Queen Consort என்ற புத்தகம், கமிலா சாதாரண பெண்ணாக இருந்து இப்போது ராணியாக (Queen Consort) மாறிய பயணத்தை விவரிக்கிறது.

இந்த புத்தகத்தை அரச எழுத்தாளர் ஏஞ்சலா லெவின் (Angela Levin) எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே இளவரசர் ஹரியிடம் எச்சரிக்கையாக இருந்த ராணி கமிலா! | Queen Camilla Always Cautious Of Prince Harry

இந்த புத்தகத்தில், கமிலா எப்பொழுதும் ஹரியைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக உணர்ந்தார், மேலும் ஹரியின் கண்கள் மற்றும் மூளை தன்னை வெறுப்புடன் பார்ப்பதாக உணர்ந்தார் என்றும் அது அவருக்கு கவலை அளிப்பதாகவும், நம்பிக்கை இழக்க செய்வதாகவும் இருந்ததாகவும் ஏஞ்சலா லெவின் எழுதியுள்ளார்.

மேலும், கமிலா எப்போதும் ஹரிக்கு ஆதரவாக இருந்தார், சரியான நேரம் என்று உணர்ந்தபோது, ​​நவீன உலகிற்கு ஏற்ப மேபடுத்திக்கொண்டு இருப்பதன் சவால்களைப் புரிந்துகொள்ள ஹரிக்கு உதவ முயன்ற தாகவும், மன்னர் சார்லஸை விடவும் சிறு பிள்ளையாக இருந்த ஹரியிடம் மிகவும் ஆதரவாக இருந்ததாகவும் இந்த புத்தகத்தில் ஏஞ்சலா குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே இளவரசர் ஹரியிடம் எச்சரிக்கையாக இருந்த ராணி கமிலா! | Queen Camilla Always Cautious Of Prince Harry

மன்னர் சார்லஸ் இளவரசி டயானாவை 1981-ல் திருமணம் செய்தார். இருவருக்கும் இடையிலான உறவு கசப்பானதையடுத்து 1996-ல் விவாகரத்து செய்தனர். ஒரு வருடம் கழித்து, இளவரசி டயானா கார் விபத்தில் இறந்தார். இளவரசி டயானாவை திருமணம் செய்துகொண்டபோது, ​​கமிலாவுடன் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு இருந்ததை சார்லஸ் ஏற்றுக்கொண்டார்.

இதன் விளைவாக, இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் ராணி கன்சார்ட் கமிலாவுடன் மிகவும் அன்பான உறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அவர்களின் தந்தையின் இரண்டாவது மனைவிக்கு எப்போதும் மரியாதை அளித்துள்ளனர் என்று எழுத்தாளர் இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.