வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கர்நாடகாவில் ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வாழ்க்கை வரலாற்றை ”வாழும் ஜாம்பவான் இம்ரான் கான் ” என்ற பெயரில் எஸ்.பி. சுதாகரன் என்பவர் புத்தகம் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி நாக மோகன்தாஸ் தலைமையில் இன்று (அக. 27)பெங்களூருவில் நடக்க திட்டமிடப்பட்டிருந்தது.
![]() |
இந்த விழாவிற்கு பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக பதிப்பாளரை உயர் போலீஸ் அதிகாரி சந்தித்து பேசினார். வீண் பிரச்னைகளை எதிர்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து புத்தக வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதாக பதிப்பளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement