சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல்

டெல்லி: சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்து வீட்டுக்கு சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாநகராட்சியில் அதிமுக சார்பில், மேயராக 2011ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் அதிமுக தலைமையுடன் அதிக நெருக்கம் ஏற்பட்டதன் காரணமாக அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன் ராமசாமியை சசிகலா புஷ்பா  2வதாக திருமணம் செய்து கொண்டார். இதிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. தற்போது தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவர் உள்ளார். இதிலும் கடந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் சக கட்சி உறுப்பினரால் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்பியாக நியமனம் செய்யப்பட்டபோது, அவருக்கு டெல்லியில் தங்குவதற்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவரது பதவிக்காலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.