கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே ஆதிவராக நல்லுர் பகுதியில் சாமிநாதன் என்ற நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார்.
இதில் இரு மகள்களுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் திருப்பூரில் தங்கி பிரேமா வேலை செய்து வந்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு பிரேமா சொந்த ஊருக்கு வந்த நிலையில் மீண்டும் திருப்பூருக்கு வேலைக்கு செல்ல கிளம்பியுள்ளார்.
அப்போது சாமிநாதன் அவரை திருப்பூர் செல்ல வேண்டாம் என்று தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கின்றது.
சாமிநாதன் ஆத்திரமடைந்து காய் வெட்டுகின்ற கத்தியை கொண்டு பிரேமாவை 12 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரேமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.