திருச்சி : திருச்சி மாவட்ட துணை போக்குவரத்து ஆணையர் அழகரசு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்றது. தி.மலையில் வட்டாரப்போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்படுள்ளது. மத்திய பேருந்து நிலையம் வில்லியம் சாலையில் உள்ள அவரது வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் சோதனை நடைபெற்றது.
