திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த காலனி பகுதியில், அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் உள்ளது. சில மர்ம நபர்கள் இந்தக் கொடிக்கம்பங்களை பிடுங்கியும், கீழே சாய்த்தும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்தக் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதேபோன்று பா.ஜ.க. சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நிர்வாகிகள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, பணிக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தலைவர் ரோஜா மணி ஈஸ்வரன் தலைமையில் கொடிக்கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அரசியல் கட்சி கொடிகளின் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்