டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. அதுக்கு பதிலா.. உ.பிகளுக்கு அண்ணாமலை அட்வைஸ்..

அரசு தமிழ் மொழிக்கு முடிவுரை எழுதுவதாக கூறி தமிழக பாஜகவினர் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மேலும், கோவை கார் குண்டுவெடிப்பு விவகாரத்தை தமிழக அரசு மெத்தனமாக கையாளுவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட கட்சி நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் சில கேள்விகள் இருப்பதாக அண்ணாமலை ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட்டில் ”தேசிய புலனாய்வு முகமை அக்டோபர் 18, 2022 அன்று தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் இருப்பதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு வந்த அறிவிப்பு. குண்டு வெடித்து தற்கொலை செய்துகொண்ட முபின் 2019 இல் என்ஐஏ விசாரணையில் இருந்தவர். அவரது நடவடிக்கையை கண்காணிக்குமாறு அப்போது தமிழக உளவுத்துறை மற்றும் கோயம்புத்தூர் காவல்துறையிடம் தேசிய புலனாய்வு முகமை கேட்டுக்கொண்டது.

அதன்படி, உள்ளூர் காவல்துறை சில நாட்கள் விசாரித்து வந்த நிலையில் அதனை நிறுத்திக்கொண்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏன் அந்த விசாரணை நிறுத்தப்பட்டது? ‘குறிப்பிட்ட’ நபர்களை கண்காணிக்காதது அரசியல் அழுத்தம் காரணமாகவா? இதற்கு நமது முதல்வர் பதில் சொல்வாரா அல்லது வழக்கம் போல் அமைதியாக இருப்பாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் திமுகவினர் சிலர் அண்ணாமலையை கண்டித்து அவரது உருவப்படத்தை எரிப்பதான வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் முதல்வரை பேச சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன். அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும் என கூறி பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.